டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் பற்றிய ஹேஸ்டெக்கை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நடிகர் அஜீத் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

டுவிட்டர் பக்கத்தில்,#AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ஒரு விழாவில் தன் மனதில் பட்டதை அஜீத்குமார் பேசினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். அன்றைய காலத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அஜீத்தின் தைரியத்தைப் பலரும் பாராட்டினர். தற்போது மீண்டும் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், #AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அருகில் அஜீத் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜீத் அரசியல் வேண்டாம் என்ற அறிக்கை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.