எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “மாமன்னன்” திரைப்படம் “ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மாமன்னன்” திரைப்படம் ஓடுனா என்ன? ஓடலைன்னா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகிறது? அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டது, கொரனாவை சிறப்பாக எதிர்கொண்டது, ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது. மருத்துவர்கள் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டது” என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். “மாமன்னன்” திரைப்படம் குறித்து கமல், ரஜினி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
செங்குண்டு அய்யனார் திருவிழா. சுடு பானையில் கறிவிருந்து சமைத்து பரிமாறல்.
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க, நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி.
நடிகர் அஜித் பெயரை கூறி தவறாக செய்யப்படுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் - அஜித் மேலாளர் சுரேஷ...



