டிரெயிலரை வெளியிடும் முதலமைச்சர்!

Filed under: சினிமா |

மிகபிரம்மாண்டமாக உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படமான “பொன்னியின் செல்வன் 1” திரைப்படத்தின் டிரெயிலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன் 1” திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர். “பொன்னியின் செல்வன்” அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலான “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான புரொமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.திரைப்படத்தின் டிரெய்லரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி சென்னையிலும், ஐதராபாத்தில் செப்டம்பர் 8ம் தேதியும் பாடல் வெளியீட்டை கோலாகலமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.