டில்லியில் பாஜகவினர் போராட்டம்!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜகவினர் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டில்லியில் அரசு நிதிபெற்று இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது குறித்து ஆளுநரிடம் மோதல் போக்கில் நடைபெற்று வருகிறது என்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது டெல்லி அரசுக்கு கவலை இல்லை என்றும் பாஜக உறுப்பினராக உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்