டில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

Filed under: இந்தியா |

டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

இன்றும் நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத்திலும் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். தற்போது, மெட்ரோ நிறுவனம் டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.