நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

Filed under: இந்தியா,உலகம்,சினிமா |

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தனது சந்தாரர்களுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது.

இணையதள வளர்ச்சியால் மக்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனிலேயே முழு படங்களையும் பார்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓடிடி வளர்ச்சியடைந்துள்ளது. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ள நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து வேறு வேறு நபர்கள் ஓடிடி தளத்தில் படங்கள் பார்ப்பதும் சமீபமாக அதிகமாக உள்ளது. அதை தடுக்கும் வகையிலும் கூடுதல் லாக் இன்னுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் விதமாகவும் நெட்ப்ளிக்ஸ் புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு நபர்களுக்கு ஷேர் செய்தால் ரூ.250 கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்டமாக சிலி மற்றும் பெரு நாட்டில் இச்சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையை வரும் காலங்களில் அடுத்து ஒவ்வொரு நாடாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.