டெலிகிராம் செயலிக்கு தடையா?

Filed under: உலகம் |

பிரேசில் நாட்டின் நீதிமன்றம் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலிக்கு தினமும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நவ நாஜிக்கல் குழு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.