டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

Filed under: உலகம் |

டெல் நிறுவனம் உலகின் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. ஏற்கனவே கடந்தாண்டு 6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. தற்போது மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் கொரோனா வைரஸ் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதையடுத்து ஒரு சில நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை பெரிய நிறுவனங்கள் எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியானது. தற்போது டெல் நிறுவனம் உலகம் முழுவதும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வருவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது