‘டைகர் 3’ பட டிரைலர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தயில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும்.

சல்மான் கான், கத்ரினா கைப் நடிப்பில், கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் “ஏக் தா டைகர்” சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜிண்டா ஹாய் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது சல்மான் கான், இம்ரான் ஹாஸ்மி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் “டைகர் 3” திரைப்படம் உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கத்தில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. “டைகர் 3” பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.