கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்து சில படங்களை தயாரித்தவர். பண விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கருணாநிதிக்கு டாட்டா காட்டியவர் ஏ.எல்.அழகப்பன். இவருக்கு முதல் மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய், இரண்டாவது மகன் உதய்.
ஏ.எல்.விஜய் நடிகை அமலாபாலைத் திருமணம் செய்தார். நடிகர் உதய், ஜெயா டி.வி. தொகுப்பாலினியை காதலித்து மணந்தார்.சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி தாணுவிடம் மோதி மூக்குடைப்பட்டார் அழகப்பன். தலைவரான பின்னும் கலைப்புலி தாணுவுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் விரோதமாக செயல்படும் தந்தையை இயக்குநர் விஜய்க்குப் பிடிக்கவில்லை. தந்தைக்கு ஆதரவாக இருந்தால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை அறிந்த விஜய், இனிமேல் இனிஷியல் ‘ஏ.எல்.’லை பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுத்து என் பெயர் டைரக்டர் விஜய் மட்டுமே என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.