ஊரடங்கு சமயத்தில் விளம்பரம் படப்பிடிப்பில் நடித்த – நடிகை காஜல் அகர்வால்!

Filed under: சினிமா |

கொரோனா வைரஸ் காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இதனை தொடங்குவதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், நடிகர்கள் நடிப்பதற்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறைந்த பின்னரே நடிக்க வருவதாக பிரபலங்கள் தெரிவிக்கின்றன என தகவல் கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் நடிகை காஜல்அகர்வால் அண்மையில் மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு பல கட்டுப்பாடுகள் கொண்டும் மற்றும் தீவிர பாதுகாப்புகப்புடனும் நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் தமிழில் நடிகர் கமலுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். பின்னர் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.