தணிக்கை சான்றிதழ் குறித்து மத்திய அரசு அதிரடி முடிவு!

Filed under: சினிமா |

தணிக்கை குழுவினர் திரைப்படங்களுக்கு யு, யுஏ மற்றும் ஏ என மூன்று வகைகளில் சான்றிதழ் வழங்கியது. இனி ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்து வகையாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய மூன்று விதமான புதிய தணிக்கை சான்றிதழுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.