தண்டவாளத்தை காணோமா…..?!

Filed under: இந்தியா |

இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகாரில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து லோகத் வரையிலான தண்டவாளங்கள் திருடு போயிருப்பதாக தெரியவந்துள்ளது. திருடு போன ரயில் தண்டவாளங்களின் இரும்புகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பீகாரில் கடந்த 19ம் தேதி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் மொபைல் கோபுரம் ஒன்றையும் திருடி சென்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மொபைல் கோபுரம் திருடு போனதை விசாரிக்க அதிகாரிகள் வந்த போது தான் ரயில் தண்டவாளமும் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது, இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.