இளைஞர் மீது தாக்குதல்!

Filed under: இந்தியா |

மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிர்பஹூரி பகுதியில் வசிக்கும் சாகர் குமார் மிஸ்ரா கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடன் படித்து வரும் தோழியை நேற்று மாலை தன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர் மிஸ்ரா, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழியுடன் பைக்கில் சென்றபோது, அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர் சிலர், இருவரையும் இடைமறித்து, மிஸ்ராவுடன் இருந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்குச் செல்லும்படி கூறியுள்ளனர். அப்பெண் வீட்டிற்குச் சென்றபின், மாணவியை பைக்கில் அழைத்துச் சென்ற மிஸ்ராவை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.