தனுஷின் படத்தில் இணைந்த இளம் நடிகை!

Filed under: சினிமா |

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிவேதிதா சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் “சில்லு கருப்பட்டி” மற்றும் “சுழல்” வெப் தொடரில் நடித்து பிரபலமானவர்.