தனுஷூடன் மீண்டும் இணையும் அமலா பால்!

Filed under: சினிமா |

இயக்குநராக தனுஷ் தன்னை நிரூபித்த திரைப்படம் “பவர் பாண்டி”. அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்கவ-ள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே “வேலையில்லாத பட்டதாரி 1” மற்றும் 2 ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.