தனுஷ் படத்தின் அறிவிப்பு!

Filed under: சினிமா |

நடிகர் தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்’’ திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

“தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர். அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்ற திரைப்படம்.

இப்படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னரே கூறியிருந்தார். அதில் “இப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

ஜூன் 22ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெயிலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் அவிக் சென் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.