தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் முக்கியமான அப்டேட்; உறுதி செய்த இயக்குனர் – மாரிசெல்வராஜ்!

Filed under: சினிமா |

நடிகர் தனுஷ் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு படங்களை நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் பிரமோஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படாமல் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் திரையரங்கு திறந்த பின்னர் ரிலீஸாகும் என கூற எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து துவங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கொண்டிருக்கும் படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கர்ணன் திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் அந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் நாளை 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் நாளை நடிகர் தனுஷின் பிறந்த நாளில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

https://twitter.com/mari_selvaraj/status/1287378795628879872
https://twitter.com/theVcreations/status/1287380201643446275

மேலும், இந்த தகவலை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.