தனுஷ் படத்தின் பர்ஸ்ட்லுக்!

Filed under: சினிமா |

இன்று “கேப்டல் மில்லர்’’ திரைப்படக் குழுவினர் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்.” தமிழகத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர். இன்று காலை 10 மணிக்கு “கேப்டன் மில்லர்” படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டனர். அதில், இன்று மாலை இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறினர். அதன்படி, இன்று மாலை, ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர். அதில், ‘’கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் ஜூன் மாதம் வெளியாகும்; அதேபோல், இப்படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வெளியாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.