தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படமாக அமைய உள்ளது. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இப்போது பிஸியாக உள்ள தனுஷ், அந்த படத்தை முடித்தவுடன் தனுஷ் 50 படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.