தன்னைத் தானே திருமணமா?

Filed under: சினிமா |

குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடித்த ‘தியா அவுர் பார்த்தி ஹம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது, இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட “கணவன் என் தோழன்” என்ற பெயரில் வெளியானது. இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். அதில், “எனக்கு இனிமேல் ஆண் துணையே வேண்டாம், நான் என்னைக் காதலிக்கிறேன். என் கனவுகள் நிறைவேறிவிட்டது. அதனால் நான் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.