தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வருகை!

Filed under: தமிழகம் |

தனுஷ்கோடியில் இலங்கையில் இருந்து வந்த 2 குடும்பங்களை காவல்துறையினர் மீட்டனர்.

தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கையிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் வாழமுடியாமல் இன்று இரண்டு குடும்பங்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகின.
கடலோர காவல் படையினரால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் மீட்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வந்த அகதிகளில் ஒருவர், “இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். எந்த வேலையும் வருமானமும் இல்லை. அதனால் தமிழகத்திற்கு தப்பி வந்தோம்” என்று கூறினார்.