தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

Filed under: தமிழகம் |

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில் கடந்த சில நாட்களாக ஓரிரு உயிர்கள் பலியாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவால் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தனர். நேற்றும் ஒருவர் பலியானார். இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலனின்றி உயிர் இழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் தினமும் உயிர்ப்பலி ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.