தமிழகத்தில் கொரோனா உச்சம் எப்போது ? அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில்தான் இருக்கும் என தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 – 1300 ஆக உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தொட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இப்போதைய பாதிப்பு (சுமார் 18,000) இன்னும் இரண்டு வாரங்களில் இரட்டிப்பாகும். இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படும். சென்னையில் அப்போது பாதிப்பு 71,000 பேராக இருக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் கொரோனா பாதிப்பு ஜூலை மாத பாதியிலேயே உச்சத்தை எட்டி சுகாதாரத்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கும்.