தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 30:
தமிழகத்தில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.