தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை!

Filed under: தமிழகம் |

வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை அறிவித்திருந்தது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலகிறது.