தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மூலமாக 13 கோடி இலவச மாஸ்க்குகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தொட்டது. மேலும் அக்டோபர் மாதம்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் எனக் கூறப்படும் நிலையில் மக்களைக் கொரோனாவில் இருந்து காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச மாஸ்க்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 13 கோடி முகக்கவசங்களை விலையில்லாமல் விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இதனை 2 கோடி குடும்ப அட்டை மூலமாக வழங்குவதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இதன் மூலம் இலவச மாஸ்க்குகள் விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.