தமிழகம் வருகிறார் கார்கே!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

காங்கிரஸ் தலைவர் கார்கே கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இம்முறை கூடுதல் தொகுதி கேட்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவாக கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் தொகுதிகளை கார்கே பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.