தமிழக அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம்!

Filed under: தமிழகம் |

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஜிதின் பிரசாதா தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமயனை கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பேட்டி ஒன்றில் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் “வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். இதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் “கொரோனாவுக்கு மாநில எல்லைகளை தெரியாது. தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து பொறுப்பற்ற கருத்து, வட இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது கருத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.