தமிழக அரசின் விருது!

Filed under: தமிழகம்,விளையாட்டு |

தமிழக அரசு விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில், கடந்த 2018 – 2019 மற்றும் 2019 – 2020ம் ஆண்டுகளுக்காக சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளளையாடு ஒருங்கிணைப்பு குழுக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்விருதுகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.