இன்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். பல்லடம் பகுதியில் நடந்த கூட்டத்தில், “தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள், கொள்ளையர்களின் நாடகத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி, அவர்களை பிரித்து, தங்களை நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் அறிவாளிகள், அதனால் தான் அவர்களுடைய நாடகம் அம்பலமாகி வருகிறது. தமிழ்நாட்டில் பொய் பேசியவர்களின் ஊழல் வெளியே வந்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தமிழகத்திற்கு தந்ததை விட பாஜகவுக்கு அதிகம் தந்துள்ளது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் பாஜக அரசு தான் தமிழகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தார்கள். தமிழகம் தேசியம் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் பார்க்க முடிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும்” என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.