தமிழ்நாடு அரசின் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு அரசு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடிப் பாலம் அமைப்பது குறித்து அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமாரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக 37 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டெண்டரை சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ளதாகவும் இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளம் மற்றும் 4 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளிநாடுகள் போல் இந்த பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது கடல் அலைகளை ரசித்துக் கொண்டே செல்லலாம் என்று கூறப்படுகிறது.