தேனியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஒருவர் தற்கொலை – பீதியில் முகாமை சேர்ந்தவர்கள்!

Filed under: தமிழகம் |

மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வந்த சசிகுமார் ரயில் மூலம் தேனிக்கு வந்துள்ளார். இவர் தேனில் உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.

தேனி மாவட்டத்தில் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தாலும் வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் அவரை தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைத்தன.

இவருடன் இரண்டு பேர் அந்த அறையில் தங்கி இருந்துள்ளனர். அந்த இருவரும் இல்லாத சமயத்தில் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த தனிமைப்படுத்தப்பட்ட முகாமை சேர்ந்த 75 பேர் தங்கள் வீட்டிற்க்கே அனுப்பி வையுங்கள் என கேட்டுள்ளனர்.

பின்பு அவர்களை சுகாதார துறை சமாதானம் செய்து அங்கேயே இருக்க வைத்துள்ளனர்.