தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Filed under: அரசியல்,இந்தியா |

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதலமைச்சர் தயார் என தமிழ்நாடு அரசு உத்தநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆளுநர் பல்வேறு மசோதாக்களையும் நிலுவையில் வைத்துள்ள நிலையில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சாசனம் தொடர்பான விவகாரம். தேநீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் தீர்க்கக்கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கூறியதால் முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளுநர் தாமாக முன்வந்து முதலமைச்சரை சந்தித்து பேசியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று தலைமை நீதிபதி விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கம் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரச கோரிக்கை வைத்துள்ளது.