தயாரிப்பாளரின்

Filed under: சினிமா |

நடிகர் விஜய்யை வைத்து “வாரிசு” திரைப்படத்தை தயாரித்துள்ள தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தில் ராஜு அடுத்ததாக ரஜினிகாந்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார். விஜய்யைத் தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கால்ஷீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.