தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாடல்!

Filed under: சினிமா |

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “தமிழ்க்குடிமகன்” உட்பட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “900 திரையரங்குகள் இருந்தும் சிறிய படங்களுக்கான திரைகள் கிடைப்பதில்லை. படம் சுமாராக இருந்தால் பரவாயில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல படம் என அனைவரும் உரக்கச் சொல்லியிருக்கும் படங்களுக்கும் இந்நிலைதான். ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது. நல்ல படத்தையும் எடுத்துவிட்டு சரியான திரையரங்கில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் நிர்க்கதியாக நிற்பதே சிறுபடங்களின் வாடிக்கையாகிவிட்டது. இதை சரிசெய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம். வெளியீட்டு முறையை ஒழுங்குபடுத்துவதின் மூலமும்.. சிறு திரைகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதின் மூலமும் இதை சரிசெய்யலாம். சம்பந்தப்பட்ட அனைத்துத் திரையுலகமும் ஒற்றுமையுடன் ஒன்று கூடி இந்நிலை மாற முயற்சி எடுக்க வேண்டும். முதலமைச்சரை அணுகி கோரிக்கை வைக்க வேண்டும். அரசும் திரைத்துறையும் சிறிய படங்களின் உயிர் காக்க அவசர ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.