தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சத்யபிரதா சாகு தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதுபோன்று வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்களும் 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரிகள் திருத்தம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்கு டிசம்பர் 8-ம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்குள் புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.