தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு எவ்வளவு தெரியுமா…?

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு தோராய செலவாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில்தான் சட்டபேரவை தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள அவர், இறுதிக்கட்டத்தில் தொகை மாறலாம் எனவும் கூறியுள்ளார்.