திருச்சி,ஏப்ரல் 28
வால்மீகி
சந்திரமோகன் என்ற தலைவெட்டி சந்துரு இவன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடியாக இருந்து சட்டவிரோத செயல் அனைத்தையும் செய்து வந்துள்ளான்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை இவன் அனுமதியுடன் தான் நடந்துள்ளதாம். அதேபோல் இன்னும் பல சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டு அடிக்கடி வழக்குகளில் சிக்கி சிறை சென்று வருவதுண்டாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு வரை இவன் பிறந்த நாளுக்கு ஆள் உயர போஸ்டர் அடித்து, பிறந்த நாளை சில சில்வண்டுகள் கொண்டாடியுள்ளனர். அதன் பிறகுதான் ஸ்ரீரங்கம் மக்களுக்கே யார் இந்த சந்துரு என வினா எழுப்பும் அளவுக்கு போனது.
உதயநிதி பேரவையில் இருந்ததால் திமுக பிரமுகர் என்ற அடையாளத்தையும் வைத்து கொண்டு வலம் வந்தள்ளாராம் சந்துரு. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இவர் தாயை ஒருவன் அடித்துவிட்டான் என்பதால், அவனை கொலை செய்து இருக்கிறார் இந்த சந்திரமோகன். அந்த கொலைக்கு யாரும் சாட்சி சொல்லக்கூடாது என்று அனைவரையும் மிரட்டி வந்த நிலையில் ஒரு பால் வியாபாரி மட்டும் இவன் கொலையை பற்றி சாட்சி சொல்லி இருக்கிறார். அதனால் இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடும் காவல் தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது, அதன்படி சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த, அந்த சாட்சி சொன்ன பால் வியாபாரியின் தலையை தனியாக துண்டித்து வடமதுரை பக்கம் கொண்டு சென்று போலிஸ்க்கே ஆட்டம் காட்டினானாம். பிறகு தான் காவல்துறை சந்திரமோகனை கைது செய்தது. அன்று முதல் சந்துரு தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் அவரின் ரவுடி குழுவிலிருந்த படையப்பா என்பவரின் தம்பியை இந்த தலைவெட்டி சந்திரமோகன் சில பிரச்சனைகளுக்காக கத்தியால் குத்தமுயன்று, அடித்ததாகவும் அதற்காக பழி தீர்க்க சந்திரமோகனை இன்று காலை திருவானைக்காவல் மேம்பாலத்தில் வைத்து சரவணன், செல்வகுமார், சுரேஷ் தரப்பினர் தலையை வெட்டி கொன்றதாகவும் பின்னர் காவல் நிலையத்தில் அவர்கள் தலையுடன் சென்று சரண் அடைந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் சரவணனுக்கும் சந்துருவுக்கும் தனிப்பட்ட விரோதம் உள்ளது அதில் சரவணன் தன்னை சந்திரமோகன் கொல்லுமுன் சந்திரமோகனை நாம் கொன்று விட வேண்டும் என்று தான் திட்டம் போட்டு கொன்றதாகவும் அதற்கு ஒத்திகையாக டிரெயினேஜ் தெரு ஏரியாவில் நேற்று ஆலோசனை பண்ணிய பிறகே இன்று இந்த கொலையை செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் தான் இந்த கொலையை இந்த மூவர் மட்டும் செய்திருக்க முடியாது. இவர்களுக்கு பின்புலம் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரணை செய்தோம். அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த நகை நாகராஜன் என்பவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோ, சந்திரமோகன் கைகளுக்கு கிடைக்க, சந்திரமோகன் அந்த வீடியோவை வைத்து நகை நாகராஜனிடம் பத்து லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மானத்துக்கு பயந்த நகை நாகராஜன் ஒரு திமுக பிரமுகரிடம் கொண்டு செல்ல அவர் பேச்சுவார்த்தை நடத்தி ஐம்பது லட்சம் வரை கொண்டு சென்றதாகவும். அந்த தொகையையும் அந்த திமுக பிரமுகர் தலைவெட்டி சந்துருவுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், இந்த விசயம் தெரிந்த தலைவெட்டி சந்துரு அந்த திமுக பிரமுகரை கொல்ல துறத்தும் பொழுது தான் போலிஸ் கையில் சிக்கி சமீபத்தில் சிறை சென்றுள்ளான்.
தலைவெட்டி சந்துரு வெளியே வந்தால் எங்கே பால் வியாபாரியை வெட்டி கொன்றது போல், தன்னையும் வெட்டி கொன்று விடுவானோ என்று பயந்த அந்த திமுக பிரமுகர் தான் கொலையாளிகள் மூவரையும் தக்க சமயத்தில் பயன்படுத்தி வெட்டி கொன்றாரா என்ற கோணத்திலும் தகவல்கள் வெளிவந்தம் உள்ளன. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் மற்றவர்களின் தலையை கொலையான சந்துரு வெட்டி எடுத்து செல்வது போல் இவர் தலையை தனியாக வெட்டி எடுத்து சென்ற சம்பவம் திருச்சியில் புதிய அத்தியாத்தை கொலையாளிகள் உண்டு பண்ணுகிறார்களோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைந்து விட்டாலும், கொலைக்கான காரணம் தெரிந்து விட்டாலும் இன்னும் கொலையாளிகளிடம் போலிஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெளிவரும் என்பதில் மாற்றம் இல்லை.