தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்!

Filed under: தமிழகம் |

குளிர்பானத்தில் விஷம் கலந்து தாத்தா, பாட்டியை கொலை செய்துள்ளார் பேரன். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அருகிலுள்ள பில்லூரைச் சேர்ந்தவர் கலுவு என்ற ஆறுமுகம். இவரது மனைவி மணி. இந்த தம்பதியர்க்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூரில் வசிக்கிறார். முருகனின் மகன் அரருள்சக்தி (19) நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர் தன் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது, உணவு மற்றும் குளிர்பானம் வாங்கிச் சென்றார். குளிர்பானத்தில் விஷம் கலந்த அருள்சக்தி, அதை தாத்தா, பாட்டிக்கு கொடுத்து கட்டாயமாகக் குடிக்கவைத்து, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், வீட்டிற்குச் சென்று தன் தந்தையிடம் உன் அப்பா- அம்மாவை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பில்லூரில் உறவினர்கள் சென்று வீட்டில் பார்க்கும்போது, ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மனைவி சடலமாகக் கிடந்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து அருள் சக்தியை தேடி வருகின்றனர்.