தாமதமாகிறது வங்கக்கடல் புயல்!

Filed under: தமிழகம் |

இன்று மாலை வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் தாமதம் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியதையடுத்து நேற்று அது காற்றழுத்த மண்டலமாக மாறியது. இன்று மாலை 5 மணியளவில் புயலாக உருமாறும். வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு புயலாக வலுப்பெறும்” என அறிவித்துள்ளது.