தாயம் விளையாட்டில் தோற்றதால் கொலை!

Filed under: சென்னை |

சென்னை ஐகோர்ட் தாயம் விளையாட்டில் தோற்றதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சென்னையை சேர்ந்த தனசேகர் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ஆனந்தன் என்பவர் தோற்கடித்தார். இதனால் மது போதையில் இருந்த தனசேகர் ஆத்திரத்தில் ஆனந்தனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.