திடீரென வழுக்கி விழுந்த மேனகா காந்தி!

Filed under: அரசியல்,இந்தியா |

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்பி மேனகா காந்தி திடீரென சேற்றில் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற பகுதிக்கு பாஜக எம்பி மேனகா காந்தி பிரச்சாரம் செய்வதற்கு சென்றார். காரில் இருந்து இறங்கி அவர் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியாக இருந்தது. ஒரு இடத்தை அவர் கடக்க முயன்றபோது திடீரென சேற்றில் வழுக்கி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரியளவில் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து அவர் முதலுதவி மற்றும் பெற்றுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.