உத்தரபிரதேச அரசு எடுத்த தீவிர முயற்சியால் 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்தது – பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் 85 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடிந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தற்சார்பு வேலைவாய்ப்பு திட்ட விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியது: இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம். அம்மாநில அரசு தீவிரமாக பணிபுரிந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 85,000 உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகமே ஒரே சமயத்தில் ஒரு சிக்கலை எதிர் கொண்டு வருகிறது என்பதை எவரும் எதிர்பார்த்ததில்லை என கூறினார்.

இந்த கொரோனா வைரஸ் சிக்கலிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்பது எவருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்து கண்டறியும் வரை அனைவரும் முக கவசங்களையும் மற்றும் சமூக இடைவெளியும் பின்பற்றுவது அவசியம் என கூறியுள்ளார்.