திடீர் திருப்பம்.. ரஜினி பெயரில் புதிய கட்சி.. !உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.. !!

Filed under: அரசியல் |

ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறி வந்த நிலையில், ரஜினி சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். மீண்டும் ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டு, நான் கண்டிப்பாக அரசில் வரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர் எஸ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி தமிழ் நாட்டுக்கு நல்லது செய்வார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவர் அறிவிப்பு அனைத்து மக்களுக்கும், அவரை இன்னும் உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அரசியலுக்கு வராததற்கு அவர் தெரிவித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இருப்பினும் எதிர்ப்பு வலிமையாக தந்துள்ளோம்.

ரஜினிகாந்தின் படம் ஒரு தீபாவளி அன்று ரிலீஸ் ஆகாவிட்டால், அதை கருப்பு தீபாவளி என்று நாங்கள் கொண்டாட மாட்டோம். எனவே அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதை எப்படி கையாள்வது? என்பது தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்காத நிலையில் நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து புதிய கட்சி தொடங்கி உள்ளோம்.

அனைத்திந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம். கட்சியின் கொடி மற்றும் சின்னம், கொள்கை தொடர்பான மற்ற விஷயங்கள் பற்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் இடம் கருத்து கேட்பு கூட்டம் பிறகு கன்னியாகுமரியில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.