திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்!

திமுகவினர் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பாக இன்று காலை மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ‘ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதும், திமுகவின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ‘தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவது போல நடத்தினார்’ எனப் பேசியதும் கண்டனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இத்தகையப் பேச்சுகளுக்கு எதிராக இன்று அதிமுக சார்பில் மாவட்டம்தோறும் போராட்டம் நடக்க இருக்கிறது. இது சம்மந்தமாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையுல் ’அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கு இணங்க, தமிழகத்தின் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் திமுக நிர்வாகிகளைக் கண்டித்தும், தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு திமுகவினரின் பேச்சுக்களைக் கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும் அதிமுகவின் சார்பில் ஜூன் 1ஆம் தேதி காலை 10.30 -11 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளது.