திமுகவில் இன்னொரு வாரிசா?

Filed under: அரசியல்,தமிழகம் |

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் உள்ள ஒரு சில வாரிசுகள் ஏற்கனவே வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளனர். தற்போது கே.என்.நேருவின் மகனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் பொன்முடி மகன் ஆகியோர் ஏற்கனவே எம்பிகளாக இருக்கின்றனர். தற்போது கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் கே.என்.நேரு வலுவாக இருக்கும் நிலையில் பெரம்பலூர் தொகுதியில் மிக எளிதாக அவர் வெற்றி பெற்று வருவார் என்று கட்சி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இதையடுத்து மேலும் சில திமுக பிரபலங்களின் வாரிசுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக திமுக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.