திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஆளுநர் வீட்டு அலமாரியில் திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பலமுறை எச்சரித்தும் வலியுறுத்தியும் ஆளுநர் மவுனமாக இருக்கிறார். இதுகுறித்து மக்களவையில் குரல் எழுப்பினோம், ஆளுநரை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.