திமுக குறித்து சசிகலா விமர்சனம்!

Filed under: அரசியல் |

ஆளுங்கட்சியான திமுகவை “முடிசூட்டு விழா’’…. இதுதான் திராவிட மாடலின் சாதனை? – என விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக கட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையிலான 3 பிரிவாகப் பிரிந்துள்ளது. அவ்வப்போது, சசிகலா அறிக்கைகளை வெளியிட்டும், ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்தும் வருகிறார். இன்று உதயநிதி எம்.எல்.ஏ. அமைச்சராகப் பதவியேற்கிறார். இதுகுறித்து சசிகலா ஓரறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அவர்களை நம்பவைத்து, ஆட்சிக்கட்டியில் அமர்ந்து தற்போது 19வது மாதத்தில் அடியெடித்து வைக்கும் இதே நேரத்தில், முடிசூட்டும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த திராவிட மாடலின் சாதனையாக பார்க்க முடிகிறது. திமுகவினர் தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மக்களுக்கு ஆசையைக் காட்டி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக இதைக் காலம் காலமாகச் செய்து வருகிறது” என கூறியுள்ளார்.