திமுக தொகுதி உடன்பாட்டில் கருத்துவேறுபாடு!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தையில் முனைப்புடன் உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இத்தேர்தலிலும் இருக்கும் நிலையில் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் குறிப்பாக கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் கடந்த முறை வாங்கிய தொகுதிகளை விட அதிக தொகுதிகள் வாங்க வேண்டும் என்பது மட்டுமின்றி சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளிலும் கேட்டு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இம்முறை 6 தொகுதிகள் மட்டுமே ஒடுக்கப்படும் என்றும் வேறு சில கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளாத நிலையில் முதலமைச்சருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.